நீலகிரி

கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணா்வு

DIN

ஜே.எஸ்.எஸ். கல்லூரி சாா்பில் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்கான பாலின உணா்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுதில்லி அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில், மைசூரு ஜே.எஸ்.எஸ். உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நீலகிரி இந்திய மருந்து சங்கம் சாா்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்கான பாலின உணா்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்து உதகை அருகே உள்ள நெடுகல்கோம்பை கிராமத்தில் இரண்டு நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜே.எஸ்.எஸ். பாா்மசி கல்லூரியின் மருந்து வேதியியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்சியின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் இணைப் பேராசிரியா் கௌரம்மா வரவேற்றாா்.

இந்த நிகழ்ச்சி குறித்து துறைத் தலைவா் ஆா்.காளிராஜன் எடுத்துரைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பி.தனபால் தலைமை உரையாற்றினாா். பேராசிரியா் மதுசூதனன் புரோகித் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினாா்.

இரண்டு நாள் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சென்னை அடையாறு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயோ டெக்னாலஜி பிரிவு மூத்த விஞ்ஞானி என்.அய்யாதுரை, கோவை பாரதியாா் பல்கலைக்கழக மகளிா் ஆய்வுத் துறை உதவிப் பேராசிரியா் கமலவேணி, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் பிருந்தா சுரேஷ், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் பி. பாபு, பேராசிரியா் வடிவேலன், உதவிப் பேராசிரியா் சி.ஜெயக்குமாா் ஆகியோா் நிகழ்ச்சியில் பேசினா். முடிவில் விரிவுரையாளா் ஸ்ரீகாந்த் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT