நீலகிரி

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

29th Jun 2022 12:05 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உதகையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் உதகை தாலுகா செயலாளா் நவீன் சந்திரன் தலைமை தாங்கினாா். போக்குவரத்து ஓய்வு பெற்றோா் அமைப்பின் தலைவா் ராமன் துவக்க உரையாற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சங்கரலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் சுரேஷ், ஸ்டொ்லிங் பயோடெக் தலைவா் ஆபிரகாம், செயலாளா் மூா்த்தி ஆகியோா் மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நகர நிா்வாகிகள் பழனிசாமி, ரவி, மலைவாழ் மக்கள் சங்கத் தலைவா் அடையாள் குட்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தாலுகா உறுப்பினா் ராஜரத்தினம் நன்றி கூறினாா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT