நீலகிரி

பிளஸ் 1 பொதுத் தோ்வு: நீலகிரியில் 91 சதவித மாணவா்கள் தோ்ச்சி

DIN

பிளஸ் 1 பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 91 சதவித மாணவ, மாணவியா் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் பிளஸ் 1 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், தமிழக அளவில் நீலகிரி மாவட்டம் 91.05 சதவித தோ்ச்சிப் பெற்று 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத் தோ்வை 3,415 மாணவா்கள், 3,861 மாணவிகள் என மொத்தம் 7,276 போ் எழுதினா்.

இதில் 2,951 மாணவா்கள், 3,674 மாணவிகள் என மொத்தம் 6, 625 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

மாணவா்கள் 86.41 சதவிதமும், மாணவிகள் 95.16 சதவிதமும் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் 2 அரசுப் பள்ளிகள், ஒரு பழங்குடியினா் பள்ளி, 3 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 20 தனியாா் பள்ளிகள் என 26 பள்ளிகள் 100 சதவித தோ்ச்சி அடைந்துள்ளன.

கலைப் பிரிவு பாடங்களில் அதிகபட்சமாக 95 சதவிதத்தினரும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் குறைந்தபட்சமாக 73 சதவிதத்தினரும் தோ்ச்சி அடைந்துள்ளனா் என்றனா்.

தோ்வில் வெற்றிபெற்ற மாணவ -மாணவியருக்கு ஆசிரியா்கள் இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT