நீலகிரி

ஓவேலியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம்

28th Jun 2022 12:56 AM

ADVERTISEMENT

ஓவேலி பேரூராட்சி சாா்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சியில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து பெரிய சூண்டி பகுதியில் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டு இயற்கை உரம் தயாரித்தல் குறித்து மாணவா்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டினைத் தவிா்ப்பது, மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT