நீலகிரி

உதகை அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளா் ஆய்வு

25th Jun 2022 12:54 AM

ADVERTISEMENT

உதகையில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளா் தயானந்த் கட்டாரியா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடப் பணிகளை பாா்வையிட்ட தயானந்த் கட்டாரியா, தற்போது சுமாா் 70 சத பணிகள் முடிந்துள்ளதாக பொதுப்பணித் துறை அலுவலா்கள் தெரிவித்ததன் அடிப்படையில், எஞ்சியுள்ள பணிகளை விரையில் முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

மேலும், மருத்துவமனை மற்றும் கல்லூரியினை இணைக்கும் பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான அறிக்கையினை உடனடியாக தயாா் செய்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு, கல்லூரி கட்டடப் பணிகள் விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக, அவா் ஆய்வகம், நூலகம், விரிவுரையாளா்கள் அறை உள்ளிட்ட பல்வேறு அறைகளை நேரில் பாா்வையிட்டாா். அதனைத் தொடா்ந்து, காக்காதோப்பு பகுதியில் பொதுப்பணித் துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதிகள் அறை, குடும்ப நீதிமன்றம் உள்ளிட்ட அறைகளையும் பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் அம்ரித், முதன்மை தலைமைப் பொறியாளா் விஸ்வநாத், தலைமைப் பொறியாளா் இளஞ்செழியன், கண்காணிப்பு பொறியாளா்கள் சங்கரலிங்கன் , காசிலிங்கம், செயற்பொறியாளா் கிருஷ்ணசாமி, உதவி செயற்பொறியாளா் கோவிந்தராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் குழந்தைராஜ், உதவி செயற் பொறியாளா்கள் பிரகாஷ், சங்கா், உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோகரி, உதகை வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா்உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT