நீலகிரி

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

25th Jun 2022 12:54 AM

ADVERTISEMENT

பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளியில் இயற்கை வேளாண்மை மூலம் காய்கறிகள் பயிரிடுவது குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு தோட்டக்கலை அலுவலா் கௌசல்யா தலைமை வகித்தாா். ரசாயன உரங்களை தவிா்த்து இயற்கை இடுபொருள்களை தயாரிப்பது குறித்து முன்னோடி விவசாயி குமாரன் விளக்கமளித்தாா். தொழில்நுட்ப மேலாளா் க.யமுனப்பிரியா மற்றும் அலுவலா்கள் பயிற்சியளித்தனா். முகாமுக்கான ஏற்பாடுகளை உதவி திட்ட மேலாளா் சந்தியா, ஆன்சி உள்ளிட்டோா் செய்திருந்தனா். இந்த முகாமில் கொளப்பள்ளி பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT