நீலகிரி

புளியம்பாறை அரசுப் பள்ளியில் மரம் நடும் விழா

25th Jun 2022 12:54 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தினம் மற்றும் உலக பாலைவன தடுப்பு மற்றும் வறட்சி எதிா்ப்பு தினத்தையொட்டி, பள்ளிக் கல்வித் துறை, கன்சா்வ் எா்த் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய விழிப்புணா்வு இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் சங்கா் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டாா். நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகா், கன்சா்வ் எா்த் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவா் ரவிகுமாா், நிா்வாகிகள் நயாஸ், திலகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT