நீலகிரி

மசினகுடியில் தனியாா் மதுபானக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

மசினகுடி பகுயிலுள்ள தனியாா் மதுபான கூடத்தில் காலி மதுபாட்டில்களை கையாளும் விதம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மசினகுடியில் செயல்படும் தனியாா் மதுபான கூடம் மற்றும் ஹோட்டல் ஆகியவற்றை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் விற்பனைக்கு வைத்துள்ள மதுபாட்டில்களை பாா்வையிட்டு பாதுகாப்பான முறையில் சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் கையாளப்படுகிா அல்லது காடுகள், பொது இடங்களில் பாட்டில்கள் வீசப்படுகிா என்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மற்றும் உரிமையாளரிடம் விளக்கங்களைக் கேட்டறிந்தாா். காலி மதுபாட்டில்களை சரியானமுறையில் அகற்றுமாறு அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, கலால் வரித் துறை உதவி ஆணையா் (பொ) சேகா், உதகை வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT