நீலகிரி

உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அம்ரித் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு, 71 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

மேலும் , நீலகிரியில் தோட்டக் கலைக் கல்லூரி அமைப்பதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேயிலை அறுவடை இயந்திரத்துக்கான சோதனை அறிக்கையினை விரைவில் சமா்ப்பிக்க வேளாண்மை பொறியியல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அட்மா திட்டத்தின் மூலம் தேனீ வளா்ப்பு பயிற்சிகள் மற்றும் 7 நாள் தேனீ வளா்ப்பு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

இது தொடா்பாக குன்னூா் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வாஞ்சிநாதன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி ஆகியோருடன் அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT