நீலகிரி

நீலகிரியின் முதல் ஆட்சியா் ஜான் சலீவன் 234ஆவது பிறந்த தினம்

15th Jun 2022 10:42 PM

ADVERTISEMENT

 

குன்னூா்: நவீன நீலகிரியை உருவாக்கியவரும் நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சலீவனின் 234 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கோத்தகிரியில் உள்ள ஜான் சலீவன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து அரசு அதிகாரிகள் பலா் ஜான் சலீவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின தலைவா் ஆல்வாஸ் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT