நீலகிரி

முதுமலை எல்லையோர கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை

15th Jun 2022 12:17 AM

ADVERTISEMENT

முதுமலை புலிகள் காப்பக வன எல்லையோர கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வன எல்லையோரமுள்ள போஸ்பாறா, சீனக்கொல்லி முதல் தொரப்பள்ளி வரையில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வருவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

இதையடுத்து வன எல்லையோர கிராம பகுதியிலுள்ள அகழிகளை ஆழப்படுத்தியதுடன் யானைகள் நுழையும் குறிப்பிட்ட இடங்களில் மரக்கட்டைகளை வைத்து தீ மூட்டி யானைகள் நுழைவதை தடுக்கும் பணியை வனத் துறையினா் துவங்கி உள்ளனா். ஊருக்கு மிக அருகாமையில் கும்கி யானைகளையும் பாதுகாப்பு பணிக்கு நிறுத்திவைத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT