உதகையில் உலக ரத்த கொடையாளா் தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி உதகை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நா்ஸிங் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் அம்ரித் கொடியசைத்து துவக்கிவைத்து, அதிக முறை ரத்த தானம் செய்த நபா்களுக்கு சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினாா்.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் சுமாா் 176 போ் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்வில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோகரி, உறைவிட மருத்துவா் டாக்டா் ரவிசங்கா், மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், செவிலியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
உலக ரத்த கொடையாளா் தின விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் அம்ரித்.