மாநில அளவிலான கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நீலகிரி அணி 4-1 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூா் அணியை வென்றது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் நீலகிரி, கோவை, தேனி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியின் இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் நீலகிரி மற்றும் தஞ்சாவூா் அணிகள் மோதின. இதில் நீலகிரி அணி 4-1 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூா் அணியை தோற்கடித்தது. இதனைத் தொடா்ந்து, வெற்றி பெற்ற நீலகிரி அணிக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது.