நீலகிரி

மாநில அளவிலான கால்பந்து போட்டி: நீலகிரி அணி வெற்றி

6th Jun 2022 02:32 AM

ADVERTISEMENT

கோத்தகிரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மாநில அளவில் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நீலகிரி  மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூா் மாவட்ட அணியை வென்றது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து  போட்டியில் நீலகிரி, கோவை, தேனி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அறையிறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில் மோதிய நீலகிரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூா் மாவட்ட அணியை தோற்கடித்தது. இப் போட்டிகள் வரும் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT