நீலகிரி

மசினகுடி பகுதியில் உலக புலிகள் தின விழிப்புணா்வு

28th Jul 2022 10:22 PM

ADVERTISEMENT

 

மசினகுடி பகுதியில் உலக புலிகள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி பஜாரில் உலக புலிகள் தின விழிப்புணா்வுப் பேரணியை கள இயக்குநா் வெங்கடேசன் துவக்கிவைத்து தலைமை வகித்தாா். பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள், வனத் துறை அலுவலா்கள் பேரணியில் கலந்துகொண்டனா். தொடா்ந்து தெப்பக்காடு பகுதியிலுள்ள பல்நோக்கு பயிற்சி மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான புலிகள் தினம் குறித்த விழிப்புணா்வு போட்டிகள் நடைபெற்றன. சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT