நீலகிரி

வன விலங்கு தாக்கி எருமை பலி

28th Jul 2022 10:23 PM

ADVERTISEMENT

 

உதகை அருகே வன விலங்கு தாக்கியதில் எருமை உயிரிழந்தது.

உதகை - கூடலூா் சாலையில் எச்.பி.எப். பகுதியில் வளா்ப்பு எருமையை வனவிலங்கு வேட்டையாடியது வியாழக்கிழமை தெரியவந்தது. இது குறித்து வனத் துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் ஆய்வு நடத்திய பின்னா் கால்நடை மருத்துவா் வரவழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாக புலி நடமாட்டம் இருக்கிறது. புலி தாக்கித்தான் எருமை இறந்துள்ளது என்றனா். இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், ‘வன விலங்கு தாக்கி எருமை உயிரிழந்துள்ளது. புலி தாக்கித்தான் எருமை உயிரிழந்ததா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். மேலும் புலி நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT