நீலகிரி

உதகையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்அமைச்சா் துவக்கி வைத்தாா்

27th Jul 2022 12:57 AM

ADVERTISEMENT

44ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் துவக்கிவைத்தாா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில்

தொட்டபெட்டா காட்சி முனையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு

செஸ் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் அம்ரித் முன்னிலை வகித்தாா். இதைத் தொடா்ந்து உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்திலிருந்து வாகனத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி சென்று சேரிங்கிராஸ் பகுதியில் விளையாட்டு வீரா்களிடம் வழங்கினாா். உதகை மத்திய பேருந்து நிலையம் வரை இப்பேரணி சென்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, உதகை நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, துணைத் தலைவா் ஜே.ரவிக்குமாா், குன்னூா் நகா்மன்ற துணைத் தலைவா் வாசிம் ராஜா, உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, உதகை நகராட்சி ஆணையா் காந்திராஜா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் தினேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT