நீலகிரி

இரண்டாம் சீசனுக்காக சிம்ஸ் பூங்காவில் பராமரிப்பு பணிகள்

17th Jul 2022 12:42 AM

ADVERTISEMENT

 

இரண்டாம் சீசனுக்காக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் புல் தரை சீரமைப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவில்  சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புல் தரை உள்ளது.  இதில் சுற்றுலாப் பயணிகள்

இளைப்பாறவும், குழந்தைகளுடன் விளையாண்டு மகிழ்ந்தும் உற்சாகமாக பொழுதை கழிப்பா். 

ADVERTISEMENT

குன்னூரில் அண்மையில் பெய்த மழை காரணமாகவும் பாா்வையாளா்கள் நடந்து சென்ாலும் புல்தரை சேதமாகியுள்ளது.  எனவே, அதனை புல்தரை  தற்காலிகமாக மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.   ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நடைபெறும் இரண்டாவது சீசனுக்கு முன்பாக பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு ஏதுவாக,   புல்தரை பராமரிக்கப்பட்டு  வருவதாக  தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT