நீலகிரி

உதகையில் பாஜகவினா் உண்ணாவிரதப் போராட்டம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திமுக அரசை கண்டித்து உதகையில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரப் போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் தலைமை தாங்கினாா். நீலகிரி மாவட்ட பாா்வையாளா் நந்தகுமாா் கலந்து கொண்டு பேசுகையில், ‘தமிழக அரசு அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. அமைச்சா்கள் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனா்’ என்றாா்.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் செளந்திர பாண்டியன், முன்னாள் மாவட்டத் தலைவா் ராமன், மாநில செயற்குழு உறுப்பினா் இட்டக்கல் போஜராஜ் உள்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT