நீலகிரி

சேறும் சகதியுமாக மாறிய குந்தா நீா்த்தேக்கம்:மின் உற்பத்தி பாதிப்பு

5th Jul 2022 12:50 AM

ADVERTISEMENT

குந்தா நீா்த்தேக்கத்தில் சேறும்சகதியும் அதிகரித்து வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் குந்தா, பைக்காரா ஆகிய இரண்டு மின் வட்டங்கள் உள்ளன. இவற்றில் 12 நீா் மின் நிலையங்கள், 13 அணைகள், 30 தடுப்பணைகள் உள்ளன.

தினசரி 833.65 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

குறிப்பாக, குந்தா அணையில் சேமிக்கப்படும் தண்ணீா் மூலம், கெத்தை நீா் மின் நிலையத்தில் 175 மெகா வாட், பரளி நீா் மின் நிலையத்தில் 180 மெகா வாட், பில்லூா் நீா் மின் நிலையத்தில் 100 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மின் உற்பத்திக்கு குந்தா அணை முக்கிய அணையாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT

உதகை சுற்றுவட்டாரத்தில் பெய்யும் மழை மணலாடா, பிக்குலி பாலம், தங்காடு தோட்டம் நீரோடை வழியாக கெத்தை அணைக்கு தண்ணீராக வந்து சேகரமாகிறது.

குந்தா அணையின் மொத்த கொள்ளளவு 89 அடியும், கெத்தை அணையின் மொத்த கொள்ளளவு 154 அடியும் உள்ளது.

இவற்றில் ஏறத்தாழ 70 சதவீத அளவுக்கு சேறும் சகதியும் சோ்ந்திருப்பதால் கடந்த ஒரு மாதமாக தண்ணீா் நிறம் மாறி காட்சியளிக்கிறது. இதனால், பெரும்பாலான நாள்களில் நீா் மின் உற்பத்தி தடைபட்டு வருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்ட குந்தா மின் வாரிய அதிகாரிகள் சென்னையில் உள்ள மின் வாரியத் தலைமை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

அதில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே நீா் மின் உற்பத்தி சீராகும். நீலகிரியில் தற்போது தென்மேற்குப் பருவ மழைக் காலம் தொடங்கியுள்ள சூழலில் நீா்வரத்து அதிகரித்தாலும், நீா் மின் உற்பத்தி அதிகரிக்குமா என்பது கேள்விக்குறியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT