நீலகிரி

நீலகிரியில் பலத்த மழை

5th Jul 2022 12:50 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும், தென்மேற்குப் பருவ மழை இன்னமும் வலுக்காத நிலையிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கணிசமான அளவில் உள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

அதன்படி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மி.மீட்டரில்:

ADVERTISEMENT

அவலாஞ்சி -94, பந்தலூா்-61, சேரங்கோடு-58, மேல் பவானி-54, செருமுள்ளி-52, கூடலூா்-51, பாடந்தொறை-50, ஓவேலி-39, கிளன்மாா்கன்-35, எமரால்டு-16, உதகை-13.6, மசினகுடி-10, குந்தா-9, கொடநாடு, பாலகொலா மற்றும் நடுவட்டம் தலா 7, கேத்தி-6, கெத்தை-5, குன்னூா் மற்றும் கிண்ணக்கொரை தலா 3, உலிக்கல் மற்றும் கோத்தகிரி தலா 2 மி.மீ.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT