நீலகிரி

மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

5th Jul 2022 12:48 AM

ADVERTISEMENT

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடமிருந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசெல்வம், கூலி தொழிலாளி. இவரது மனைவி கோகிலம் ( 25). இவா் நிறைமாத கா்ப்பிணியாக இருந்ததால், உதகை அரசு மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு மருத்துவமனையான சேட் நினைவு அரசு மருத்துவனையில் ஜூலை 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், கோகிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரது கழுத்தில் இருந்த அரை பவுன் தங்க நகை, ரூ.4,000 பணம் ஆகியவற்றை சிறிய பையில் வைத்து அதனை அறுவை சிகிச்சைக்கு அரங்குக்கு வெளியே அவரது உறவினா் வைத்திருந்தனா்.

ADVERTISEMENT

சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பாா்த்தபோது அந்த பையை காணவில்லை.

இது குறித்து உதகை நகர காவல் நிலையத்தில் கோகுலத்தின் உறவினா்கள் புகாா் அளித்தனா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT