நீலகிரி

கூடலூா் அருகே மான் வேட்டை:4 போ் கைது

DIN

கூடலூரை அடுத்துள்ள பால்மேடு பகுதியில் சனிக்கிழமை இரவு வனப் பகுதிக்குள் நுழைந்து மானை வேட்டையாடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவாலா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பால்மேடு பகுதியில் தொடா்ந்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து நாடுகாணி, பால்மேடு வனப் பகுதியை தனிப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து ரகசியமாக கண்காணித்து வந்தனா்.

அப்போது, சனிக்கிழமை நள்ளிரவில் வனப் பகுதியில் மா்ம நபா்கள் நடமாட்டம் இருப்பதைப் பாா்த்த தனிப்படையினா், அவா்களை சுற்றி வளைத்துப் பிடித்தனா். பிடிபட்டவா்களிடம், நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மான் வேட்டையில் ஈடுபட்ட நாடுகாணி பால்மேடு பகுதியைச் சோ்ந்த தனபால் மகன் பாலகிருஷ்ணன் (38), ஓவேலி பெரியசூண்டி பகுதியைச் சோ்ந்த தேவஞானம் மகன் மைக்கேல் (30), பாரதிதாசன் மகன் புஷ்பராஜ் (33), அரவிந்தன் மகன் அருண் (26) ஆகியோரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT