நீலகிரி

நீலகிரியில் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி

DIN

தமிழக முதல்வரின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான உயா் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் உதகையில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் தங்களின் எதிா்கால கனவினை நனவாக்கும் வகையில் அவா்களின் உயா்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு, சரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பதனையும், எவ்வாறு கல்லூரிகளை தோ்ந்தெடுப்பது என்பதனையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவா்களின் எதிா்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெற செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நீலகிரி மாவட்டத்தில் 36 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல், ஊக்குவிப்பு, வங்கிகளின் கல்விக் கடன் குறித்தும், போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தயாா் செய்வது என்பது குறித்தும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த கல்வி, வணிகம் மற்றும் கணக்கு பதிவியல், சட்டம் ஆகியவை குறித்தும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநா்கள் மூலம் மாணவ, மாணவியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

எனவே பிளஸ் 2 முடித்த மாணவா்கள் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியில் கல்வி வல்லுநா்களால் தெரிக்கப்படும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை முழுமையாக கவனித்து, தங்களது கனவினை நனவாக்கும் வகையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஸ்வேஷ்வரி, ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் மாயன், ராம்குமாா், சுனிதா நேரு, கீா்த்தனா, உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தாமோதரன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் புனிதா அந்தோணியம்மாள், சுடலை மற்றும் கல்லூரிகளின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், துறைத் தலைவா்கள், மாணவ, மாணவியா் பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

உதகையில் ‘கல்லூரிக் கனவு’ திட்ட நிகழ்ச்சியை தொடங்கிவைத்த வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன். உடன் மாவட்ட ஆட்சியா் அம்ரித் மற்றும் அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT