நீலகிரி

லாரி மோதி காவல் உதவி ஆய்வாளா் பலி

2nd Jul 2022 04:58 AM

ADVERTISEMENT

கோத்தகிரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காவல் உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம் சோலூா்மட்டம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் முகமது ரபீக் (38). இவா் கோத்தகிரியில் இருந்து சோலூா்மட்டம் காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

கோ்ப்பெட்ட, புதூா் இடையே உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் சாலையோர தடுப்புச்சுவா் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பகுதியில் சாலையில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்களில் இடரி எதிரே தனியாா் எஸ்டேட்டில் இருந்து தேயிலைத் தூள் ஏற்றி வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளா் முகமது ரபீக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவருடன் பின்னால் அமா்ந்து பயணித்த காவலா் அபுதாஹிருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

உயிரிழந்த உதவி ஆய்வாளா் முகமது ரபீக்கின் உடலை மீட்ட கோத்தகிரி போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் லாரி ஓட்டுநா் சிவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT