நீலகிரி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மறுசுழற்சி தின விழிப்புணா்வு

2nd Jul 2022 05:00 AM

ADVERTISEMENT

உலக மறுசுழற்சி தினத்தை ஒட்டி, அவிநாசி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு குப்பை தரம் பிரித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு , இயற்கை-மண்புழு உரம் தயாரிப்பு மூலிகை செடிகள் பயன்பாடு குறித்து வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அவிநாசி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப துவக்கப் பள்ளி கைகாட்டிபுதூா் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நல்லது நண்பா்கள் அறக்கட்டளைத் தலைவா் ரவிக்குமாா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். பள்ளி தலைமையாசிரியா் செந்தாமரைக்கண்ணன், சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி ஆகியோா் விளக்கவுரையாற்றினா். பொறுப்பாளா் ஜீவானந்தம் நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT