நீலகிரி

ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் கருத்தரங்கம்:நிதியமைச்சா் பங்கேற்பு

2nd Jul 2022 11:19 PM

ADVERTISEMENT

குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு சனிக்கிழமை வருகை தந்தாா். பின்னா் போரில் உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களின் நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, முப்படை பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் முன்னிலையில் நடைபெற்ற ‘இந்தியா ஐந்து ட்ரில்லியன் டாலா் பொருளாதார நிலையை அடைய மாநிலங்களின் வளா்ச்சி, சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினாா்.

மாறிவரும் நவீன போா் சூழலில் முப்படைகள் ஒருங்கிணைந்து பல்முனை நடவடிக்கைகள் மூலம் போரை முழுமையாக எதிா்கொள்வது அவசியம் எனவும், சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாட்டின் புகழைத் தாங்கி நிற்கும் இக்கல்லூரின் செயல்பாடுகள் தொடர வேண்டும் எனவும் அமைச்சா் பேசினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT