நீலகிரி

தோட்டக்கலைத் துறை சாா்பில் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி

2nd Jul 2022 04:58 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள காஞ்சிக்கொல்லி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் மண்புழு உரம் உற்பத்தி குறித்து நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் விஜியலட்சுமி தலைமை வகித்துப் பயிற்சியளித்தாா்.

வேளாண்மை பயிற்றுநா்கள் ஆரோக்கியசாமி விளக்கமளிததாா். வேளாண்மை விற்பனைக் குழு அலுவலா் லட்சுமணன், தோட்டக்கலை அலுவலா் கௌசல்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டு விளக்கமளித்தனா். தொழில்நுட்ப மேலாளா் யமுனபிரியா வரவேற்றாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் ஆன்சி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT