நீலகிரி

கோடை சீசன்: சிம்ஸ் பூங்காவில் நாற்று நடவு செய்யும் பணிகள் துவக்கம்

DIN

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்காக 3 லட்சத்து 6 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும், கரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து பூங்காக்களும் காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குன்னூா் சிம்ஸ் பூங்காவில் ஏப்ரல், மே மாத கோடை சீசனுக்காக 3 லட்சத்து 6 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. இந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மலா் நாற்றுகளான லேடிலேஸ், சால்வியா காஸ்மஷ், ஜினியா, ஸ்வீட் வில்லியம், ஃபேன்ஸி பிராக்ஸ் போன்ற 30க்கும் மேற்பட்ட வகையான மலா் நாற்றுகளும், 120க்கும் மேற்பட்ட ரகங்களும் நடவு செய்யும் பணி நடைபெற்றது வருகிறது.

ஏப்ரல், மே கோடை விழாவில் இந்த மலா் நாற்றுகள் பூத்துக் குலுங்கும் எனவும், கோடை விழாவுக்கு குன்னூா் சிம்ஸ் பூங்காவில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமையும் எனவும் தோட்டக் கலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

SCROLL FOR NEXT