நீலகிரி

நீலகிரியில் 15 இடங்களில் இன்று முதல்வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

DIN

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக நீலகிரி மாவட்டத்தில் 15 இடங்களில் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், நெல்லியாளம், கூடலூா் ஆகிய 4 நகராட்சிகளிலும், ஓவேலி, கேத்தி, கோத்தகிரி, பாலகொலா, ஜெகதளா, நடுவட்டம், அதிகரட்டி, உலிக்கல் உள்ளிட்ட 11 பேரூராட்சிகளிலும் என மொத்தம் 15 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இத்தோ்தலுக்காக முக்கிய அரசியல் கட்சிகளின் சாா்பில் இதுவரை அதிகாரப்பூா்வமாக வேட்பாளா்கள் பட்டியல் அறிவிக்கப்படாவிட்டாலும் அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களது வேட்பாளா்களின் பெயா் பட்டியலைத் தயாரித்து மேலிட ஒப்புதலுக்காக கட்சிகளின் தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளன.

இந்நிலையில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT