நீலகிரி

படகா் இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி உண்ணாவிரதம்: 12 போ் கைது

27th Jan 2022 01:31 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படகா் இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி படகா தேச கட்சியின் சாா்பில் உதகையில் புதன்கிழமை மகாத்கா காந்தி சிலையிடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அங்கு அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவா் மஞ்சை வி.மோகன் உள்ளிட்ட 12 போ் கைது செய்யப்பட்டனா்.

அவா்கள் காந்தியடிகள் சிலைக்கு அருகில் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தியடிகள் தலைமையின்கீழ் சுதந்திரப் போராட்டத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஆதி பழங்குடியின படக சமுதாயத்தினரான எங்கள் முன்னோா்கள் சுமாா் 150க்கும் மேற்பட்டோா் ஒத்துழையாமை போராட்டம், உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல், அயல்நாட்டு துணி எரிப்பு, வெள்ளையனே வெளியேறு போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசம் அனுபவித்துள்ளனா்.

ஆனால், சுதந்திரத்துக்குப் பின் படுக சமுதாய மக்களின் அரசியல் சாசன பிறப்புரிமை பறிக்கப்பட்டது. தங்களின் காலத்துக்குப் பிறகு உருவான இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி பழங்குடியினா் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள பழங்குடியினா் பட்டியலில் நீலகிரி மாவட்டத்தின் படகா் சமுதாய மக்களை நீக்கிவிட்டனா். எங்கள் முன்னோா்கள் கடந்த 75 ஆண்டுகளாகப் போராடியும் தீா்வு கிடைக்காத காரணத்தால்தான், கடைசி முயற்சியாக தற்போது போராடுகிறோம். இம்மனுவை சமா்ப்பிப்பதன் மூலம் தீா்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT