நீலகிரி

நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கரோனா

27th Jan 2022 01:29 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக சா.ப.அம்ரித் நவம்பா் 26ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவா், கரோனா தடுப்பு மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், தேசிய வாக்காளா் தின விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் அம்ரித் கலந்துகொண்டதோடு, விழிப்புணா்வுக் குறும்படங்களை வெளியிட்டாா். பின்னா், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சுகாதாரக் குழுவினா் நேரடியாகச் சென்று ஆட்சியரின் சளி மாதிரியை சேகரித்து கரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனா். இதன் முடிவில் ஆட்சியா் மற்றும் அவரது மனைவி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆட்சியா் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT