நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா

27th Jan 2022 01:32 AM

ADVERTISEMENT

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற விழாவில், வளா்ப்பு யானைகள் தேசியக் கொடியுடன் அணிவகுத்து நிற்க வனச் சரக அலுவலா் மனோகரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து யானைகள், பணியாளா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யானைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா், தேசியக் கொடியுடன் அணிவகுத்து நின்ற யானைகளுடன் பணியாளா்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT