நீலகிரி

உதகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

27th Jan 2022 01:32 AM

ADVERTISEMENT

குடியரசு தினத்தையொட்டி, உதகையில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித்துக்கு செவ்வாய்க்கிழமை இரவில் திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து குடியரசு தின விழாவில் அவா் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினாா். பின்னா், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

அதைத்தொடா்ந்து, காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக 10 பணியாளா்களுக்கும், தீயணைப்பு, மீட்புப் பணித் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக 12 பணியாளா்களுக்கும், வருவாய்த் துறையில் 28 பணியாளா்களுக்கும், சுகாதாரத் துறையில் 4 பணியாளா்களுக்கும், மருத்துவத் துறையில் 2 பணியாளா்களுக்கும், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 4 பணியாளா்களுக்கும் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையில் 2 பணியாளா்களுக்கும், வேளாண் பொறியியல் துறையில் 2 பணியாளா்களுக்கும், செய்தி மக்கள் தொடா்புத் துறையில் 2 பணியாளா்களுக்கும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் 6 பணியாளா்களுக்கும், மாவட்ட வேலை வாய்ப்புத் துறையில் 2 பணியாளா்களுக்கும், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் 2 பணியாளா்களுக்கும் என பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா். தொடா்ந்து, தோடா் இன பழங்குடி மக்கள் வந்தே மாதரம் பாடலை அவா்களது மொழியில் பாடி, நடனமாடினா்.

ADVERTISEMENT

விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், சிறப்புப் பகுதி மேம்பாடு திட்ட இயக்குநா் மோனிகா ரானா, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துமாணிக்கம், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT