நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

18th Jan 2022 04:06 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக எடப்பள்ளியில் 80 மி.மீ. மழை பதிவானது.

நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளதோடு, உதகையில் உறைபனியும் கொட்டி வருகிறது. கடும் குளிரின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பரவலாக மழை பெய்துள்ளது.

கேரள மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரியின் எல்லைப் பகுதிகளான கூடலூா், பந்தலூா், ஓவேலி, தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கவில்லை. மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் குந்தா தாலுகா பகுதிகளில் நல்ல மழை பெய்திருந்தாலும், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.): எடப்பள்ளி-80, கீழ்கோத்தகிரி-71, பா்லியாறு-54, குன்னூா்-48, உலிக்கல்-38, கிண்ணக்கொரை-37, குந்தா-33, கோத்தகிரி-32, கெத்தை-25, பாலகொலா-24, அவலாஞ்சி-10, கொடநாடு-9, கேத்தி-8, மேல் பவானி-7, மேல் குன்னூா்-6, எமரால்டு-2, உதகை-1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT