நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலையில் தண்ணீா் பாறை அருகே சாலையை திங்கள்கிழமை கடந்த சிறுத்தையை அவ்வழியாக வாகனத்தில் சென்றவா்கள் தங்களது கைப்பேசியில் பதிவு செய்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக குடியிருப்பு மற்றும் நகா்புறப் பகுதிகளில் கரடி, காட்டு எருமை, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் சுற்றித் திரிவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், குன்னூரில் இருந்து டால்பின் நோஸ் பகுதிக்கு செல்லும் சாலையில் வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை இரவு நேரத்தில் சாலையைக் கடந்து சென்ற சிறுத்தையை வாகன ஓட்டி ஒருவா் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளாா்.
இந்த சாலையின் வழியாக டால்பின் நோஸ், கரன்சி, லேம்ஸ்ராக் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.