நீலகிரி மாவட்டம், குன்னூா் டால்பின் நோஸ் செல்லும் சாலையில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் பிளாஸ்டிக் டப்பா முகத்தில் சிக்கி சுற்றித் திரிந்த சிறுத்தைப் பூனையை வனத் துறையினா் மீட்டனா்.
முகத்தில் பிளாஸ்டிக் டப்பா சிக்கி சிறுத்தைப் பூனை சுற்றித் திரிவதாக வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையில் சென்ற வனத் துறையினா் சிறுத்தைப் பூனை முகத்தில் சிக்கிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் டப்பாவை அகற்றி மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டனா்.