நீலகிரி

நீலகிரியில் 235 பேருக்கு கரோனா:மேலும் ஒருவா் பலி

18th Jan 2022 04:04 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 235 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறையின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 235 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 92 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

அதேபோல, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உதகையைச் சோ்ந்த 68 வயது முதியவா் உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் 36,262 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 34,573 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, இதுவரை 221 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 1,468 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT