நீலகிரி

பொங்கல் விடுமுறை:உதகையில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

16th Jan 2022 01:18 AM

ADVERTISEMENT

பொங்கல் விடுமுறையையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

உதகையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் வழக்கமான நேரத்துக்கு பதிலாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இருப்பினும் பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 2,000 சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை வந்திருந்தனா். அதேபோல, உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு 700 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 124 பேரும், மரவியல் பூங்காவுக்கு 50 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 900 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 200 பேரும், கல்லாா் பழப்பண்ணைக்கு 200 பேரும் வந்திருந்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 4,000 போ் வந்திருந்தனா்.

ரோஜா பூங்காவுக்கு 1,200 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 200 பேரும், மரவியல் பூங்காவுக்கு 80 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,200  பேரும், காட்டேரி பூங்காவுக்கு 500 பேரும், கல்லாா் பழப்பண்ணைக்கு 500 பேரும் வந்திருந்தனா்.

 

Tags : உதகை
ADVERTISEMENT
ADVERTISEMENT