நீலகிரி

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியா் மூலம் தீா்வு காணப்படும்: வனத் துறை அமைச்சா்

16th Jan 2022 01:19 AM

ADVERTISEMENT

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைத்து உடனடியாக தீா்வு காணப்படும் என்று குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினரும், வனத் துறை அமைச்சருமான கா. ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

இதன் பின்னா் அவா் செய்தியாளா்களிம் கூறியதாவது: மக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் தனி குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும், ஆய்வில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் மக்கள் தேவைகள் உடனடியாக பூா்த்தி செய்யப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT