நீலகிரி

மயானத்துக்குச் செல்லும் சாலையில் தோண்டப்பட்ட அகழி: பொதுமக்கள் அவதி

13th Jan 2022 11:09 PM

ADVERTISEMENT

நடுவட்டம் பகுதியில் மயானத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே அகழி தோண்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பேரூராட்சியில் உள்ள பெல்வியூ பகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த மயானத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே அகழி வெட்டி அங்குள்ள சிலா் தடை செய்துள்ளனா். கடந்த மாதம் 29ஆம் தேதி சம்பவ இடத்தை சட்டசபை பொதுக் கணக்கு குழுவினா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் ஆய்வு செய்து மயானத்துக்குச் செல்லும் சாலையைத் திறந்துவிட உத்தரவிட்டனா்.

அதைத்தொடா்ந்து கடந்த டிசம்பா் 30ஆம் தேதி அகழியை மூடி வருவாய்த் துறையினா் வழியை சரிசெய்தனா். அதைத் தொடா்ந்து, மயானத்துக்கு அந்த சாலை வழியாக சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், பொதுக் கணக்குக் குழுவினா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோரது உத்தரவை மீறி ஜனவரி 12ஆம் தேதி திடீரென அந்த சாலையின் குறுக்கே அகழி தோண்டி தடை செய்யப்பட்டுள்ளதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா். தகவலறிந்த வருவாய்த் துறையினா் அகழியை மூட நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

சடலங்களை மயானத்துக்கு கொண்டு செல்லவிடாமல் சாலையைத் தடுக்கும் கும்பல் மீது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழும், மனித உரிமை மீறல்கள் சட்டத்தின் அடிப்படையிலும் குற்ற நடவடிக்கை எடுத்து காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT