நீலகிரி

சுற்றுலா வேன் டயரில் தீப்பிடித்ததால் பரபரப்பு

5th Jan 2022 06:57 AM

ADVERTISEMENT

கூடலூா் நகரில் சுற்றுலா வேன் டயரில் செவ்வாய்க்கிழமை மாலை தீப்பிடித்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் சிலா் வந்திருந்தனா். உதகையை சுற்றிப் பாா்த்துவிட்டு ஊருக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, கூடலூா் நகா் அருகே வேனின் பின்பக்க டயரில் திடீரென தீப்பற்றியது. சாலையோரம் இருந்தவா்கள் சப்தமிட்டதும் சாலையில் வேனை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தீயணைப்புக் கருவியை எடுத்து விரைந்து தீயை அணைத்தாா். பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கி சாலையோரம் நின்றனா். நீண்ட நேரத்துக்குப் பிறகு வேனை சாலையோரம் நிறுத்தி பழுது பாா்த்தனா். இதனால், நகரில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT