நீலகிரி

நீலகிரியில் மேலும் இருவருக்கு கரோனா

1st Jan 2022 04:09 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 12 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 34,433 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34,144 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 219 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 70 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Tags : உதகை
ADVERTISEMENT
ADVERTISEMENT