கூடலூா் நகரில் இளைஞா்களுக்கு இடையே சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மோதலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீண்ட நேரம் சாலையில் ஏற்பட்ட மோதலால் உதகை சாலையில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞா்கள் நீண்ட நேரம் தாக்கிக் கொண்டனா். இறுதியாக போலீஸாா் வந்து போக்குவா்தை சீா்செய்தனா்.