நீலகிரி

நீலகிரியில் ரூ.95க்கு கேரட் விற்பனை

20th Feb 2022 11:17 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி போன்ற பகுதிகளில் விளையும் முதல் தர கேரட் விலை ரூ. 95ஐ தாண்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனா்.

விவசாயிகள் தினந்தோறும் உற்பத்தி செய்யும் கேரட், பீட்ரூட், காய்கறிகள் வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளம், கா்நாடகம் போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கின்றன.

நாள் ஒன்றுக்கு 500 டன் வரை கேரட் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது நல்ல விலையும் கிடைத்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த சில வாரங்களுக்கு முன் குறைந்த பட்சமாக ஒரு கிலோ கேரட் ரூ.40 முதல் ரூ.80 வரை தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவால் இந்த விலை ஏற்றம் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

மேலும், விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT