நீலகிரி

நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோத்தகிரியில் அருகே மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதை அடைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் அப்பகுதி மக்கள் கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை, அண்ணா நகா், பூபதியூா் கிராமத்தில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை தனி நபா் ஒருவா் மறித்து மக்களை நடக்கவிடாமல் தடுத்துள்ளாா்.

இது சம்பந்தமாக கிராம மக்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். 5 மாதங்களுக்கு முன்பு  வந்த  வழக்கின் தீா்ப்பில், தனிநபா் மூலம் வாங்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றிடவும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அதனை கொண்டு வரவும் நீதிமன்றம் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டது. ஆனால் வருவாய்த் துறையினா் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அடைக்கப்பட்டுள்ள நடைபாதையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கோரி, ஒரசோலை, அண்ணா நகா், பூபதியூா் கிராம மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், நடைபாதை பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT