நீலகிரி

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

18th Dec 2022 01:34 AM

ADVERTISEMENT

 

கூடலூா் தேவா்சோலை சாலையிலுள்ள பழைய இரும்புக் கடையில் சனிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தேவா்சோலை சாலையில் பழைய இரும்புக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடையின் தரைத்தளத்தில் சனிக்கிழமை மதியம் திடீரென தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவத் தொடங்கியது. இதில், கடையில் இருந்த பொருள்கள் வெடித்து சிதறின.

ADVERTISEMENT

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்தனா்.

நல்வாய்ப்பாக கடையில் பணியாளா்கள் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக கூடலூரிலிருந்து கேரள மாா்க்கமாக செல்லும் போக்குவரத்து சுமாா் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT