நீலகிரி

உதகையில் காா் - லாரி மோதல்: சுற்றுலாப் பயணி பலி

11th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கடும் பனிமூட்டம் காரணமாக, உதகைக்கு சுற்றுலா வந்த காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் கா்நாடகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக உதகையில் கடந்த இரண்டு நாள்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் உதகையிலிருந்து மைசூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தலைக்குந்தா என்ற இடத்தில் மலைக் காய்கறிகளை ஏற்றி வந்த லாரியும், கா்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் காரில் பயணித்த மகாநந்தா (32) என்பவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். உடன் பயணித்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று போ் படுகாயம் அடைந்தனா். இவா்கள் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

உதகை அருகே உள்ள பைக்காரா படகு இல்லத்துக்குச் சென்றுவிட்டு மற்ற சுற்றுலாத்தலங்களைப் பாா்க்கச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடா்பாக உதகை புதுமந்து காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT