நீலகிரி

குன்னூா் நியாய விலைக் கடைகளில் ஆட்சியா் ஆய்வு

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில்வே ஊழியா் கூட்டுறவு பண்டகசாலை, மற்றும் அருவங்காடு கோபாலபுரம் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவத்தினா் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடைகளில் மாவட்ட

ஆட்சியா் அம்ரித் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடையில் பொருள்களின் இருப்பு விவரம், விலைப் பட்டியல்,

நியாய விலைக் கடை செயல்படும் நேரம், வார விடுமுறை நாள், கண்காணிப்பு குழு உறுப்பினா் விவரம் உள்ளிட்ட விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்றாா். தொடா்ந்து, அருவங்காடு கோபாலபுரம் முன்னாள் ராணுவத்தினா் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருள்கள், மீதமுள்ள பொருள்களின் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

நியாய விலைக் கடைக்கு பொருள்கள் வாங்க வருகை தந்த குடும்ப அட்டைதாரா்களிடம் நியாய விலைக் கடையின் செயல்பாடுகள், வழங்கப்பட்டு வரும் அரிசி மற்றும் குடிமைப் பொருள்களின் தரம் குறித்து கேட்டறிந்து, குடும்ப

அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டிய பொருள்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று நியாய விலைக் கடை விற்பனையாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, வட்டாட்சியா் சிவகுமாா், குன்னூா் வட்ட வழங்கல் அலுவலா் வசந்தன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT