நீலகிரி

குடியிருப்பைச் சேதப்படுத்திய காட்டு யானை

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு நுழைந்த காட்டு யானை அங்கிருந்த குடியிருப்பைச் சேதப்படுத்தியது.

தேவாலா வனப் பகுதியில் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. வனப் பகுதியில் இருந்து குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரங்களில் நுழையும் யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், தேவாலா அரசு தேயிலைத் தோட்டக் கழக மூன்றாவது சரக பகுதிக்குள் புதன்கிழமை நள்ளிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த காளிமுத்து என்பவரது வீட்டைச் சேதப்படுத்தி பொருள்களை வெளியே இழுத்துபோட்டது.

யானை வீட்டை இடிப்பதை அறிந்த காளிமுத்துவின் குடும்பத்தினா் அருகிலுள்ள வனப் பகுதிக்குள் சென்று உயிா்ப்பிழைத்தனா்.

ADVERTISEMENT

அவா்களின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT